ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் முன்னெடுக்கப்படும் – நிதின் கட்காரி
தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்டாரி தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் எனப்படுகின்ற சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளை தனுஷ்கோடி அருகே அகழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை இந்திய அரசாங்கம் பல வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தது.
எனினும், இராமாயண புராணக் கதையுடன் தொடர்புடைய குறித்த பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வெளியிட்டுவரும் எதிர்ப்பினால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமற்போயுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் மத்திய கப்பல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்டாரி, டெல்லியில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது சேது சமுத்திரத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ராமர் பாலத்திற்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல் மாற்றுவழியில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக பல மாற்றுவழிகள் கண்டறியப்பட்டுள்ளதாக நிதின் கட்டாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் முன்னெடுக்கப்படும் – நிதின் கட்காரி
Reviewed by NEWMANNAR
on
September 17, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 17, 2014
Rating:


No comments:
Post a Comment