துறைமுக நகரத்தின் (PORT CITY) நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பம்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஷீ ஜின்ங்பின், கொழும்பு காலி முகத்திடலில் PORT CITY எனப்படும் துறைமுக நகரத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவிக்கின்றார்.
துறைமுக நகரம் தொடர்பான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திப்பட்டது
குறித்த உடன்படிக்கை உள்ளிட்ட மேலும் 27 உடன்படிக்கைகள் இரு நாடுகளுக்கு இடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்காக நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
இதன்போது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இறுதி கட்டம் செயற்படுத்தப்பட்டமை முக்கியமானதொரு விடயமாகும்.
தொலைக்கட்டுப்பாட்டு கருவி ஊடாக இந்த கட்டம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 900 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றது.
ஆரம்பம், கொழும்பு, சீன ஜனாதிபதி, துறைமுகம்,
துறைமுக நகரத்தின் (PORT CITY) நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
September 17, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 17, 2014
Rating:


No comments:
Post a Comment