ஸ்கொட்லாந்து தனி நாடாகுமா? பரபரப்பான வாக்குப்பதிவு
பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து தனி நாடாக பிரிவதற்கான வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை ஒருங்கிணைந்து பிரித்தானியா என்று அழைக்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் தனி பாராளுமன்றம் இருந்தாலும் குறிப்பிட்ட அதிகாரமே அதற்கு உள்ளது. மற்றவை அனைத்தும் பிரித்தானியாவின் கீழ் இருந்து வருகிறது.
ஆகவே,பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஸ்கொட்லாந்திற்கு அதிகப்படியாக உரிமைகளை வழங்குகிறோம் என்று பிரித்தானிய பிரதமர் கூறியிருந்தாலும், ஸ்கொட்லாந்து இதை ஏற்கவில்லை.
எனவே, திட்டமிட்டபடி இன்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.30) வாக்குப்பதிவு தொடங்கியது. 16 வயது முதல் 17 வயதுடையோர் உள்பட 43 லட்சம் மக்கள் வாக்களிக்க பதிவு செய்திருந்தனர்.
இவர்கள் இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி நள்ளிரவு 2.30 மணி) வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கென 2600 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஸ்கொட்லாந்து தனியாக பிரிய விருப்பம் என்றால் ‘Yes’ என்று வாக்களிக்க வேண்டும். ஸ்காட்லாந்து பிரிய விருப்பம் இல்லையென்றால் ‘No’ என்று வாக்களிக்க வேண்டும்.
இந்த வாக்குகள் எண்ணப்பட்டு வெள்ளிக்கிழமை காலை அறிவிக்கப்படும். அப்போது ஸ்கொட்லாந்து தனி நாடாக பிரியப்போகிறதா? அல்லது பிரித்தானியாவுடன் இணைந்து இருக்குமா? என்பது தெரியவரும்.
ஸ்கொட்லாந்து தனி நாடாகுமா? பரபரப்பான வாக்குப்பதிவு
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment