ஊவா மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
ஊவா மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதால் தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் சி.நந்தா மெத்தீவ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மொனராகலை மாவட்டத்தில் ஒரு பாடசாலையும் வாக்கெண்ணும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு மாவட்டங்களிலிருந்தம் பல பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக மற்றுமொரு நாள் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த விடயம் தொடர்பில மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானிப்பார் எனவும் மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பல ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் மாகாணத்தின் சகல பாடசாலைகளும் நாளை மூடப்பட்டும் என மாகாண ஆளுநர் சி.நந்தா மெத்தீவ் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:


No comments:
Post a Comment