தொழில்நுட்பக் கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்டது மலேசிய விமானம்
இந்தியாவின் ஐதராபாத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, தொழில்நுட்பக்கோளாறு காரணமாக மீண்டும் ஐதராபாத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட போயிங் 737-800 ரகத்தைச் சேர்ந்த, MH 198 என்ற விமானமே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பக் கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்டது மலேசிய விமானம்
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:


No comments:
Post a Comment