மருதானையில் கட்டடமொன்றின் ஏழாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு
மருதானை பகுதியில் மாடிக் கட்டடம் ஒன்றின் ஏழாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் குறிப்பிட்ட கட்டடத்திற்கு அருகிலிருந்து இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்ற இந்த மாடிக் கட்டடத்தின் ஏழாம் மாடியில் குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர் நேற்றிரவு உபசார நிகழ்வொன்றை நடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மருதானையில் கட்டடமொன்றின் ஏழாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 18, 2014
Rating:


No comments:
Post a Comment