மன்னாரில் முன்பள்ளி மாணவர்களினால் நடாத்தப்பட்ட அறிவூட்டும் ஊர்வலம்.Photo
'பாசத்துடன் பிள்ளைகளை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆளுமையை விருத்தி செய்வதற்காக பெற்றோர்களுக்கான ஆறிவூட்டல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(26) காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் உலக தரிசன நிறுவனத்தின் நிதி உதவியுடன் குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.
மன்னாரில் உள்ள 10 முன்பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து மாணவர்களின் பொற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குறித்த விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.
மன்னார் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் குறித்த ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் பிரதேசச் செயலகத்தை வந்தடைந்தது.
இதன் போது கலந்து கொண்ட முன்பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்ட மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மன்னார் உதவி பிரதேச செயலாளர் வி.பவாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
மன்னாரில் முன்பள்ளி மாணவர்களினால் நடாத்தப்பட்ட அறிவூட்டும் ஊர்வலம்.Photo
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:

No comments:
Post a Comment