தலைமன்னார் பியரில் உள்ள வீடு ஒன்றின் மீது இடி விழுந்ததில் வீட்டில் இருந்தோர் காயம்
தலைமன்னார் பியரில் இடி விழுந்ததில் வீடு ஒன்றும் அங்குள்ள மின்சார உபகரணங்கள் அனைத்தும் பெரும் சேதத்துக்கு உள்ளாகியதுடன் வீட்டில் இருந்த கணவன் மனைவியும் காயங்களுக்கும் உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
நேற்று வியாழக் கிழமை (25) மாலை மன்னார் பகுதியில் கால நிலை மாற்றம் அடைந்து இடி மின்னல் மற்றும் இலேசான மழையும் பெய்தன.
இவ்வேளையில் இரவு 7.30 மணியளவில் தலைமன்னார் பியரில் தலைமன்னார் தபால் அலுவலகத்தில் கடமை புரியும் என்.பாலச்சந்திரன் என்பவரும் அவரின் மணைவியும் வீட்டில் இருந்த சமயத்தில் அவர்களின் வீட்டின் சுவரில் இடி விழுந்து வீடு சிறு சேதத்துக்கு உள்ளாகியதுடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின் வயர்கள் முற்றாக எரிந்ததுடன் அங்கு இருந்த மின்சார உபகரணங்கள் யாவும் சேதம் அடைந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அச் சமயத்தில் வீட்டில் இருந்த கணவனும் மனைவியும் இடி தாக்கத்துக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
தலைமன்னார் பியரில் உள்ள வீடு ஒன்றின் மீது இடி விழுந்ததில் வீட்டில் இருந்தோர் காயம்
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment