அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெண்களுக்கான மார்பக மற்றும் கற்பப்பை புற்று நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை-Phone

பெண்களுக்கான மார்பக மற்றும் கற்பப்பை புற்று நோய்களை கண்டறிவதற்கான முன்னோடி பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது. 

மன்னார் சனத்தொகை சேவைகள் லங்கா (பி.எஸ்.எல்) நிறுவனத்தில் அதன் மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஏ.ரசாக் தலைமையில் இடம் பெற்றது. மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் வருகை தந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு குறித்த மார்பக மற்றும் கற்பப்பை புற்று நோய்களை கண்டறிவதற்கான முன்னோடி பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளது. 

 குறித்த பரிசோதனையின் போது பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் கொழும்பு தேசிய புற்றுநோய் பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சனத்தொகை சேவைகள் லங்கா (பி.எஸ்.எல்) நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஏ.ரசாக் தெரிவித்தார். 

 குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.ஆர்.யூட், சனத்தொகை சேவைகள் லங்கா (பி.எஸ்.எல்) நிறுவனத்தின் இலங்கைக்கான  பணிப்பாளர் டாக்டர் அஜித் மென்டிஸ்,தேசிய புற்றுநோய் பணியகத்தின் வைத்தியர் டாக்டர் ஏ.எஸ்.அனுஸாந்தன்,மாவட்ட உதவிச்செயலாளர் என்.பரமதாஸ்,மடு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.சந்திரபால,மாவட்ட உள நல வைத்தியர் டாக்டர் சுகந்தி கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் பெண்களுக்கான மார்பக மற்றும் கற்பப்பை புற்று நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை-Phone Reviewed by NEWMANNAR on September 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.