மன்- புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு வழங்கப்பட்டகாணி தொடர்பில் முரண்பாடு-Photo
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட 2 ஏக்கர் காணி தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கும மூர்வீதி கிராம அபிவிருத்திச்சங்கத்திறகும் இடையில் முரணபாடுகள் நிலவி வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2 ஏக்கர் காணியில் தனி நபர்கள் அத்துமீறி நுழைந்து காணி அபகரிப்பை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அப்பாடசாலை மாணவர்கள் குறித்த காணியினுள் சென்று சிரமதானப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு பின்பாகவுள்ள காணியில் அப்பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்காக 2 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியில் 1½ ஏக்கர் காணி மன்னார் ஆயரினாலும் ½ ஏக்கர் காணி அரசாங்கத்தினாலும் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.
எனினும் குறித்த காணியை பாடசாலை நிர்வாகம் பராமரிக்காத நிலையில் காணப்பட்டது.இந்த நிலையில் குறித்த காணியினை தனி நபர்கள் ஆக்கிரமிப்புச் செய்ய தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மூர்வீதி கிராம அபிவிருத்திச்சங்கம் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி நுழைந்து காணியை அடைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாடசாலை நிர்வாகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையில் பாடசாலை விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட காணி துப்பரவின்றி காணப்பட்டமையினால் தற்போது தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றமையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் சிரமதானப்பணியில் ஈடுபட்டதோடு எமது காணிக்குள் அத்துமீறி நுழைந்து வேலி அடைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மூர்வீதி கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் எம்.இக்பால் முஹமட் ஜவாத் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,,
குறித்த பகுதிகளில் உள்ள காணி 1986 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் 27 குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட அரச காணி.எனினும் 13 குடும்பங்களுக்கு மாத்திரமே தற்போது அப்பகுதியில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏனைய 14 குடும்பங்களுக்கும் இது வரை வழங்கப்படவில்லை.இந்த நிலையில் மூர்வீதி கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு காணி தேவை என நாங்கள் விண்ணப்பித்திருந்தோம்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப்பின் குறித்த பகுதியில் 20 பேச் காணி மூர்வீதி கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டது.
குறித்த காணிக்கு நாங்கள் சென்று குறித்த 20 பேச் காணியை அடையாளப்படுத்தினோம்.இதனால் பாடசாலை தரப்பினர் எமக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறையிட்டனர்.பொலிஸார் எம்மை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
நாங்கள் குறித்த 20 பேச் காணிக்கான ஆதாரங்களை காண்பித்தோம்.இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அப்பகுதிக்கு வந்த மாணவர்கள் நாங்கள் அடையாளப்படுத்திய எமது எல்லைகளை உடைத்துள்ளனர்.இது தொடர்பிலும் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளோம்.
என மூர்வீதி கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் எம்.இக்பால் முஹமட் ஜவாத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மன்னார் காணி அதிகாரியை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மன்- புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு வழங்கப்பட்டகாணி தொடர்பில் முரண்பாடு-Photo
Reviewed by NEWMANNAR
on
September 15, 2014
Rating:

No comments:
Post a Comment