அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

மன்னார் சௌத்பார் கடற்கரையில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை உடைகள் எவையும் இன்றி ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மன்னார் சௌத்பார் கடற்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலத்தை நேரில் கண்ட கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.இந்த நிலையில் அங்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த சடலம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது என தெரியவந்துள்ளது.சடலத்தில் இரண்டு கை மற்றும் இரண்டு கால்களும் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் காணப்பட்டது. 

 இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் சம்பவ இடத்திறகுச் சென்ற மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரணை  அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை சடலத்தை பார்வையிட்டதோடு,சடலத்தை அடையாளம் காண்பதற்காக வைத்தியசாலையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 இதே வேளை மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையோரப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் கடந்த 3 ஆம் திகதி புதன் கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சௌத்பார் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. Reviewed by NEWMANNAR on September 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.