அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பாடசாலையில் கல்வி கற்று வந்த 11 வயது மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அப்பாடசாலை அதிபர்.

தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 11 வயது மாணவனை அப்பாடசாலையின் அதிபர் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது. 

 குறித்த சிறுவன் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

 குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,,, 

 தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என பாதிக்கப்பட்ட மாணவன் மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை(23-09-2014) பாடசாலைக்குச் சென்ற குறித்த மாணவனை அப்பாடசாலையின் அதிபர் பாடசாலையின் களஞ்சிய சாலைக்கு அழைத்துச் சென்று குறித்த சிறுவனின் ஆடைகளை களைந்து குற்றம் புரிந்துள்ளார். 

 குறித்த சிறுவன் உடனடியாக சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.பெற்றோர் இச்சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை குறித்த சிறுவன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிறுவனிடம் வைத்தியர்கள் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர். 

இதன் போது தனக்கு நடந்தவற்றை மாணவன் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை குறித்த பாடசாலையின் அதிபரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அதிபர் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பாடசாலையில் கல்வி கற்று வந்த 11 வயது மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அப்பாடசாலை அதிபர். Reviewed by NEWMANNAR on September 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.