அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் வாகன விபத்து; ஒருவர் பலி

கிளிநொச்சி, புளியம்பொக்கனை – நாகேந்திரபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறியரக வேனொன்றும், வைக்கோல் ஏற்றிய லொறியொன்றும் பாதசாரி ஒருவர் மீது நேற்றிரவு 8 மணியளவில் மோதியுள்ளது. விபத்தில் சுமார் 65 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

 விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இதேவேளை, கல்முனை பகுதியில் வீதியை கடந்துகொண்டிருந்த பாடசாலை சிறுமி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சியில் வாகன விபத்து; ஒருவர் பலி Reviewed by NEWMANNAR on September 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.