அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விவசாயிகளுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு-Photo

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிளயவில் மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மன்னார் உதவி விவசாய பணிப்பாளர் கே.அற்புதச்சந்திரன் தலைமையில் இடம் பெற்றது. 

இதன் போது குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பி.ஐங்கரநேசன்,வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,வடமாகாண விவசாய பணிப்பாளர் சி.சி.சிவகுமார்,வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எம்.ஹல்டீன், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,விவசாயிகள்,விவசாய பண்ணையாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 இன் போது முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அன்னாசி,மற்றும் மாங்கன்றுகள் வழங்கப்பட்டதோடு அவற்றுக்கான உரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.அதே வேளை தெரிவு செய்யப்பட்ட பண்ணையாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது. 

 குறித்த மரக்கன்றுகளை வடமாகாண விவசாய அமைச்சர் பி.ஐங்கரநேசன் தலைமையில் வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.



























மன்னார் விவசாயிகளுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு-Photo Reviewed by NEWMANNAR on September 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.