அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்/அல்-அஸ்ஹர் ம.வி தேசியபாடசாலையில் 'ஈ-ஸ்கோப்-14'எனும் தொனிப்பொருளில் பிரமாண்டமான கல்விக்கண்காட்சி

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு முதலாவது வருடத்தை கடக்கின்ற நிலையில் 'ஈ-ஸ்கோப்-14'எனும் தொனிப்பொருளில் பிரமாண்டமான கல்விக்கண்காட்சி ஒன்றை இப்பாடசாலை சமூகம் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக அப்பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தெரிவித்தார்.

 இப்பாடசாலையின் ஆசிரியர்கள்,பழைய பாணவர்களின் வழி நடத்தலில் இப்பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்டவை கண்காட்சிக்காக வைக்கப்படுகின்றது. எதிர்வரும் 27,28,29 ஆகிய மூன்று தினங்களிலும்(சனி,ஞாயிறு,திங்கள்) குறித்த காண்காட்சி இப்பாடசாலையில் இடம் பெறவுள்ளது. 

மாணவர்களின் அறிவு,திறன்,மனப்பாங்கு என்பவற்றை விருத்தி செய்யும் வகையிலும் இப்பாடசாலை மாணவர்களின் திறன்களை வெளி உலகிற்கு வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலை மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிவரும் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை பாடசாலையில் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார்/அல்-அஸ்ஹர் ம.வி தேசியபாடசாலையில் 'ஈ-ஸ்கோப்-14'எனும் தொனிப்பொருளில் பிரமாண்டமான கல்விக்கண்காட்சி Reviewed by NEWMANNAR on September 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.