அண்மைய செய்திகள்

recent
-

விளையாட்டு பயிற்சி முகாம் - மன்னார் பொது விளையாட்டு மைதானம்-Photo

மன்னார் மாவட்ட செயலகமும் இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து மாவட்ட ரீதியாக விளையாட்டு பயிற்றுனர்களாக கடமையாற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு அதிகாரிகள் மற்றும் விளையாட்டுக்கழக பயிற்றுனர்கள் ஆகியோர்களுக்கு 2 நாள் விளையாட்டு பயிற்சி முகாம் நடாத்த உள்ளனர்.

 இதற்கான சகல ஏற்பாடகளையும் மாவட்ட விளையாட்டு இணைப்பாளர் திரு ஆ.சு.ஆ.ஜஸ்மின் மற்றும் விளையாட்டு பயிற்றுனர் செயஸ்தியாம்பிள்ளை , ராஜா அவர்களும் . மன்னார் வலய உடற்கல்விப்பணிப்பாளர் மதின் அவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டுள்ளனர். இப்பயிற்சியின் பொருட்டு தேசியமட்ட வளவாளர்கள், விரிவுரையாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அத்துடன் விளையாட்டு அமைச்சின் தேசிய கொள்கைகளில் ஒன்றான கிரடா சக்தி வலுவூட்டல் நிகழ்வும் நடைபெறவுள்ளது. தேசிய கிரீடா சக்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களினால் தியநெகும நிகழ்வின் போது அரசாங்க அதிபர் தலைமையில் வைபவ ரீதீயாக ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்டது.




விளையாட்டு பயிற்சி முகாம் - மன்னார் பொது விளையாட்டு மைதானம்-Photo Reviewed by NEWMANNAR on September 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.