அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவு.-Photo

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் இரு தடவைகள் கைது செய்யப்பட்ட 36 இந்திய மீவர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 7 ஆம் திகதி (07-10-2014) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் இன்று உதன்கிழமை உத்தரவிட்டார். 

குறித்த 36 இந்திய மீனவர்களும் இன்று புதன் கிழமை விசாரணைகளுக்காக இரண்டாவது தடவையாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுததப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை பிரப்பித்தார். கடந்த 9 ஆம் திகதி படகு ஒன்றில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிபில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்களும்,அதனைத்தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி 6 படகுகளில் வருகை தந்து மீன் பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த 36 இந்திய மீனவர்களும் இன்று 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் குறித்த 36 இந்திய மீனவர்களும் இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.





தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 36 இந்திய மீனவர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவு.-Photo Reviewed by NEWMANNAR on September 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.