விவசாயி சேற்றிலே கால் வைக்காது விட்டால் நாங்கள் சோற்றிலே கை வைக்க முடியாது-வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா.-Video
விவசாயி சேற்றிலே கால் வைக்காது விட்டால் நாங்கள் சோற்றிலே கை வைக்க முடியாது என்பார்கள். இது தான் உண்மை என வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,
பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம் ஸ்கொட்லாந்து எனும் நாட்டின் மக்களை தனி நாட்டு மக்களாக அங்கீகாரம் கொடுப்பதா? இல்லையா?என்ற ஒரு வாக்குரிமை.
ஒரு சர்வஜன வாக்கு கேட்கும் நடவடிக்கை இடம் பெறவிருந்த நிலையில் அவை இறுதியில் நிறைவேறாது போய் விட்டது.
உலகினுடைய இந்த ஸ்கொட்லாந்து,சூடான் போன்ற நாடுகளோடு இன்று தேசிய இனங்களில் ஒன்றாக இருக்கின்ற எங்களுடன் பலம் பேசுகின்றோர் குறிப்பிடுகின்றார்கள் சிறுபான்னை இனம் என்று.
சற்று வித்தியாசமாக நாங்கள் ஒரு தேசிய இனம் என்று கூறுகின்றோம். இங்கு தமிழர்களும்,முஸ்ஸீம்களும் வாழுகின்ற இவ் இனத்தை தேசிய இனம் என அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாங்கள் இந்த ஸ்கொட்லாந்து மக்களோடு ஈழத்தமிழர்களின் வரலாறுகளோடு தென் சூடான் மக்களோடு இணைந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
விவசாயி சேற்றிலே கால் வைக்காது விட்டால் நாங்கள் சோற்றிலே கை வைக்க முடியாது-வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா.-Video
Reviewed by NEWMANNAR
on
September 24, 2014
Rating:

No comments:
Post a Comment