1ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைக்க இலஞ்சம் கோரினால் முறையிடலாம்
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் போது, பாடசாலை நிர்வாகத்தினால் இலஞ்சம் கோரப்படுமாயின் அது தொடர்பில் முறையிடுவதற்காக மேல் மாகாண கல்வி அமைச்சினால் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாகவோ அல்லது பொருளாகவோ பாடசாலை நிர்வாகத்தினால் இலஞ்சம் அல்லது உதவிகள் கோரப்படுமாயின், அது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு முறையிடுமாறு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகளை வார நாட்களில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட தொலைபேசி அல்லது தொலைநகல் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிடலாம் என அவர் மேலும் கூறினார்.
தொலைபேசி: 011 - 2675293
தொலைநகல்: 011 - 2693966
1ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைக்க இலஞ்சம் கோரினால் முறையிடலாம்
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment