மன்னாரில் 11 வயது மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 11 வயது மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அப்பாடசாலையின் அதிபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
தலைமன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கல்வி கற்று வந்த 11 வயதுடைய மாணவரை கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் குறித்த அதிபர் பாடசாலையின் களஞ்சிய அறைக்குள் அழைத்துச் சென்று குறித்த மாணவனின் சீருடையை களைந்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் இச்சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் சென்று முறையிட்ட நிலையில் பெற்றோர் தலைமன்னார் பொலிஸாரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் குறித்த சிறுவன் நேற்று வியாழக்கிழமை மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன் போது அதிபரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என பாதிக்கப்பட்ட மாணவன் மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை குறித்த பாடசாலையின் அதிபரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அதிபர் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த அதிபரை எதிர்வரும் 9 ஆம் திகதி (09-10-2014) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மன்னாரில் 11 வயது மாணவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:

No comments:
Post a Comment