அண்மைய செய்திகள்

recent
-

படகு ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள மன்னார் மாணவன் கிங்ஸ்லி சாள்ஸ்லியோ பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்.

மன்னார் உயிலங்குளம் சிறு நீலா சேணை கிராமத்ததைச் சேர்ந்த கிங்ஸ்லி சாள்ஸ்லியோ என்ற மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் எதிர்வரும் 12,13,14 ஆம் திகதிகளில் பிரான்ஸ் நாட்டின் கிரவலிங்ஸ் நகரில் நடைபெறவிருக்கும், உலக பல்கலைகழகங்களுக்கிடையிலான 13வது படகு ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். 

 உலக பல்கலைகழகங்களுக்கிடையிலான 13வது படகு ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை பல்கலைக் கழகங்களின் விளையாட்டு சங்கத்தினால், தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையிலே அவர் பிரானஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். 

இவர் 2014 ஆம் ஆண்டு இடம் பெற்ற பல்கலைக்கழகங்களுக்கான படகு ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதோடு இந்தியா,பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு பல பதக்கங்களையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு சங்கத்தின் செயலாளராவார்.இவர் மன்னார் நொச்சிக்குளம் றோ.க.த.க.பாடசாலை,மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை,மன்-உயிலங்குளம் றே.க.த.க.பாடசாலைகளின் பழைய மாணவரும் ஆவார்.
படகு ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள மன்னார் மாணவன் கிங்ஸ்லி சாள்ஸ்லியோ பிரான்ஸ் நாட்டிற்கு பயணம். Reviewed by NEWMANNAR on September 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.