அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை ஆசிரியை கடத்தல் சம்பவம்; சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இன்று இடம்பெற்றது. 

 26 வயதான ஆசிரியை ஒருவர் கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதுடன், குறிப்பிட்ட ஆசிரியை சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளார். 

 இதனையடுத்து சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருகோணமலை ஆசிரியை கடத்தல் சம்பவம்; சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் Reviewed by NEWMANNAR on September 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.