அண்மைய செய்திகள்

recent
-

செந்தில் தொண்டமான் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்த விபத்து; சாரதி பொலிஸில் சரண்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை வேட்பாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்த பண்டாரவளை விபத்துடன் தொடர்புடைய சாரதி பதுளை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

 ஒருவர் உயிரிழந்த இந்த விபத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச்சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த விபத்தில் 27 பொது மக்களும், பாதுகாப்பிற்கான நியமிக்கப்பட்டிருந்த 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

 விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட செயலா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென அஜித் ரோஹன தெரிவித்தார்.

 இதேவேளை, இந்த விபத்து தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் கருத்து வெளியிட்டிருந்தார்.
செந்தில் தொண்டமான் உள்ளிட்ட 31 பேர் காயமடைந்த விபத்து; சாரதி பொலிஸில் சரண் Reviewed by NEWMANNAR on September 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.