அண்மைய செய்திகள்

recent
-

வேப்பமடு பகுதியில் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்; சந்தேகநபர் கைது

புத்தளம் – வேப்பமடு பகுதியில் பெண்ணொருவர், எரியூட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேப்பமடு, 4ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் எரிகாயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

 கணவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளதுடன், இந்த பெண் வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

 அந்த நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் எரியூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேப்பமடு பகுதியில் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்; சந்தேகநபர் கைது Reviewed by NEWMANNAR on September 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.