அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 கிழக்கு பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் அருகே பிற்பகல் 12.45 இல் இருந்து சுமார் அரை மணித்தியாலம் இந்த கவனயீர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார். 

 பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்குமாறு கோரும் சுலோகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியால் வாகனங்களில் பயணித்தவர்களுக்கும் இதன்போது விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on September 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.