அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பருத்திப்பண்ணை கடற்கரையில் மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு.

தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை என்ற கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,, 

 தலைமன்னார் பொலிஸ் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை என்ற கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் காணவில்லை என கூறி அவர்களின் உறவினர்கள் தேடுதல்களை மேற்கொண்டனர். எனினும் அவரை எங்கும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தலைமன்னார் தென் கடல் பகுதியான பருத்திப்பண்ணை கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. மூன்று பிள்ளைகளின் தாயான பர்வோன் ஞானமாணிக்கம் (வயது 44) என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவருகிறது. 

 சடலம் தலைமன்னார் பொலிஸாரால் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மதியம் மன்னார் வைத்தியசாலைக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி தே.பி.சிந்தாத்துரை மரண விசாரணையை மேற்கொண்டார். பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பருத்திப்பண்ணை கடற்கரையில் மூன்று பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு. Reviewed by NEWMANNAR on September 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.