அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஆனந்து கனகரட்ணம் நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார். 

 அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கடந்த 30 ஆம் திகதி நீதிமன்ற துப்பரவு பணிகளுக்காக அழைத்து செல்லப்பட்ட சந்தேகநபரே தப்பிச் சென்றிருந்தார்.

 பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்ற உத்தரவிற்கமைய நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு நேற்று மாலை மீண்டும் ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபருக்கு விளக்கமறியல் Reviewed by NEWMANNAR on September 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.