பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மன்னார் விஜயம் மாவட்ட நீதிமன்றத்திற்கும் வருகை தந்தார். -Photo
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலை விசேட வானூர்தி மூலம் மன்னார் தள்ளாடி படைத்தளத்தை வந்தடைந்த நிலையில் காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
இதன் போது மன்னார் நுழைவாயிலான பாலத்திலிருந்து மாலை அணிவித்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேற்கப்பட்டார்.
மன்னார் நீதிமன்ற வளாகத்தினுள் இடம் பெற்ற பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை பிரதம நீதியரசர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவரது வருகையின் ஞாபகார்த்தமாக நீதியரசரால் மரக்கன்று ஒன்று நடப்பட்டது.
பின் மன்னார் நீதிவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் மகிந்த பினிதினிய தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது வரவேற்பு நடனம் மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றது.இந்த நிகழ்வில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் மகிந்த பினிதினிய உற்பட வவுனியா மாவட்ட நீதிபதிகள், மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள், மன்னார் நகர சபை தலைவர், பொலிஸ், இராணுவ, கடற்படை உயரதிகாரிகள் உட்பட திணைக்களத் தலைவர்கள் பலர் கொண்டனர்.
இறுதியில் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகளினால் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களுக்கு ஞாபகச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் 15ஆந் திகதி பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மடுத்திருவிழாவுக்கு வருகை தந்திருந்தபோது நீதியரசரை மன்னாருக்கு வருகை தரும்படி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அழைப்பு விடுத்திருந்த நிலையியே அவர் மன்னார் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மன்னார் விஜயம் மாவட்ட நீதிமன்றத்திற்கும் வருகை தந்தார். -Photo
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:

No comments:
Post a Comment