அண்மைய செய்திகள்

recent
-

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னார் அஞ்சல் திணைக்களத்தில் இரத்த தான நிகழ்வு.-Photo

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னார் அஞ்சல் திணைக்களத்தில் மன்னார் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ஐ.சின்னப்பு தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 09 மணியளவில் இரத்த தான நிகழ்வுகள் இடம் பெற்றது. 

 மன்னார் அஞ்சல் திணைக்களத்தில் குறித்த இரத்த தான நிகழ்வு ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட தபால் திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ஐ.சின்னப்பு தெரிவித்தார். 

 இதனை விட மன்னாரில் அஞ்சல் தொடர்பான விழிர்ப்புணர்வு செயற்பாடுகளும் முனனெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் தபால் சேவையை மேலும் மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக விழிர்ப்புணர்வு கருத்தரங்கு,வீதி நாடகம்,துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்,ஊர்வலம்,சிரமதானங்கள் ஆகியவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ஐ.சின்னப்பு மேலும் தெரிவித்தார்.










உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மன்னார் அஞ்சல் திணைக்களத்தில் இரத்த தான நிகழ்வு.-Photo Reviewed by NEWMANNAR on September 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.