செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்
இன்னும் 10 தினங்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் நுழைந்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
450 கோடி ரூபாவில் ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 5 ஆம் திகதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில் மங்கள்யான் பயணிக்கிறது. செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய அதன் பயணம் சுமுகமாகத் தொடர்ந்து வருகிறது. தற்போது பூமியில் இருந்து 2110 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் மங்கள்யான் உள்ளது.
"மங்கள்யான் விண்கலம் தனது 95 சதவீத பயணத்தை பூர்த்தி செய்து விட்டது.இன்னும் பயணம் செய்ய 40 இலட்சம் கிலோமீட்டர்களே உள்ளன. தனது நிலை குறித்த பல்வேறு தொகுதிகள் அளவீடுகள் குறித்து முக்கிய தகவல்களை மங்கள்யான் அனுப்பி வைத்து உள்ளது" என்று இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது.
செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:


No comments:
Post a Comment