பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மன்னார் விஜயம்
இலங்கையின் பிரதம நீதியரசரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 15ஆம் திகதி மொஹான் பீரிஸ் மடுத்திருவிழாவுக்கு வருகை தந்திருந்தபோது மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம், பிரதம நீதியரசரை மன்னாருக்கு வருகை தரும்படி மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் ஊடாக அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கமைவாகவே பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று மன்னாருக்கு வருகை தருகிறார் என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதிவானுமான இம்மனுவேல் கயஸ் பல்டானோ தெரிவித்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை மன்னார் தீவு நுழை வாயிலான பாலத்திலிருந்து வரவேற்கப்படவுள்ளார்.
அத்துடன் மன்னார் நீதிவான் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் மன்னார் மேல்நீதிமன்ற ஆணையாளர் மகிந்த பினிதினிய தலைமையில் கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு மன்னார் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களைச் சேர்ந்த 23 உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். பிரதம நீதியரசரின் வருகையை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த வழக்குகளில் குடியியல் வழக்குகள் எதிர்வரும் 2.12.2014 ஆம் திகதிக்கும் ஏனைய வழக்குகள் 30.09.2014 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இம்மனுவேல் கயஸ் பல்டானோ தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மன்னார் விஜயம்
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:


No comments:
Post a Comment