அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பப்பை மாற்றுக்கு பின் பிறந்த முதலாவது குழந்தை


கர்ப்பப்பை மாற்று சிகிக்சை செய்து கொண்ட பெண்ணொருவர் ஆண் சிசுவொன்றை பிரசவித்த சம்பவம் சுவீடன் நாட்டில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பப்பை மாற்று சிகிச்சையின் பின்னர் பிறந்த முதலாவது குழந்தை இதுவென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.



 திருமணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்த தம்பதியினருக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது. தான் கருவுறாமையினால் பெண்ணொருவர் வைத்தியர்களின் மூலம் கர்ப்பப்பை மாற்று சிகிச்சை செய்துள்ளார். 61 வயதுடைய பெண்ணொருவரின் கர்ப்பப்பையை சத்திரசிகிக்சை மூலம் வைத்தியர்கள் குறித்த பெண்ணுக்கு பொருத்தியுள்ளனர். 

 சிகிச்சைகளை தொடர்ந்து புதிதாக பொருத்தப்பட்ட கர்ப்பப்பையை சரியான முறையில் இயங்கச்செய்வதற்காக பல்வேறு மருந்துகளை கொடுத்ததன் பின்னர், குறித்த பெண்ணுக்கு மாதவிடாய் ஆரம்பித்துள்ளது. இதன் பின்னர் வைத்தியர்கள் குறித்த பெண்ணின் முட்டை மற்றும் அவருடைய கணவரின் விந்தணுக்களை ஒன்று சேர்த்து கர்ப்பப்பையினுள் செலுத்தியுள்ளனர்.

 தொடர்ந்து கர்ப்பம் தரித்த பெண் 31 கிழமைகளில் ஆண் சிசுவொன்றை பிரசவித்துள்ளார். சிசு 1கிலோ 770கிராமையும் கொண்டுள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் இது வைத்திய உலகில் செய்யப்பட்ட மிகப்பெரிய சாதனையென்று தெரிவிக்கப்படுகின்றது.
கர்ப்பப்பை மாற்றுக்கு பின் பிறந்த முதலாவது குழந்தை Reviewed by NEWMANNAR on October 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.