கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் மஹாஜனக் கல்லூரி மாணவி தேசிய சாதனை
பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் மஹாஜனக் கல்லூரியின் வீராங்கனையான ஜெகதீஸ்வரன் அனிதா தேசிய சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான பாடசாலை மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
போட்டியில் ஜெகதீஸ்வரன் அனிதா 3.32 மீற்றர் உயரத்துக்கு தாவினார்
இதன் மூலம் 2012 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் நிலை நாட்டப்பட்ட 3.30 மீற்றர் உயர தேசிய சாதனை முறியடிக்கப்பட்டது .
அந்த சாதனையை கடற்படை வீராங்கனை அனோமா கருனாவன்ச நிலைநாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் மஹாஜனக் கல்லூரி மாணவி தேசிய சாதனை
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:


No comments:
Post a Comment