முசலி பிரதேச பாடசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு-Photo
அமைச்சர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமைய முசலி பிரதேச சபை தலைவர் எம்.எஹியான் அவர்களினால் மரிச்சிக்கட்டி அல்-ஜாசிம் பாடசாலைக்கான பாடசாலை உபகரணங்களை நேற்று(2) வியாழக்கிழமை மாலை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த பாடசாலைக்கு 50 கதிரைகள்,மேசைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் குடி நீர் பிரச்சினையினை நிவர்த்தி செய்யும் முகமாக 1000 லீட்டர் நீர் தாங்கி ஆகியவற்றை பாடசாலை அதிபர் ஏ.டி. றயிஸ் என்பவரிடம் முசலி பிரதேச சபையில் வைத்து கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் இடம் பெயர்ந்த பாடசாலைகளுக்கான முசலி கோட்டக் கல்வி இணைப்பாளர் எம்.பீ.பதுருசமான் கலந்து கொண்டார்.
முசலி பிரதேச பாடசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 03, 2014
Rating:




No comments:
Post a Comment