அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் 200 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மன்னாரில் ஆரம்பம்.


பாக்கிஸ்தான் அரசின் நிதி உதவியுடன் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் 200 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று சனிக்கிழமை(11) காலை அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜென்ரல் காசிம் குறைசி,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ,வடமாகாண ஆளுனர் மேஜர் ஜென்ரன் ஜீ.ஏ.சந்திர சிறி, மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் பிரதேசச் செயலாளர்கள்,அமைச்சரின் இணைப்புச் செயலாளர்,உற்பட கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த 200 வீடுகளுக்குமான அடிக்கல் நாட்டும் திகழ்வு இடம் பெற்றதோடு புதுக்குடியிருப்பு முஸ்லிம் ம.வி பாடசாலையில் விசேட கூட்டம் ஒன்றும் இடம் பெற்றது.

இதன் போது அமைச்சர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன்,பசில் ராஜபக்ஸ மற்றும் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜென்ரல் காசிம் குறைசி ஆகியோர் உரையாற்றியதோடு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதற்கான  அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையின் கட்டிடத்திறப்பு விழா நிகழ்வு இன்று சனிக்கிழமை(11) மதியம் இடம் பெற்றது.

மஹிந்த சிந்தனையின் கீழ் 52 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்டுள்ள நிர்வாக அலகு,உயர்தர விஞ்ஞான ஆய்வு கூடங்கள்,கணணி ஆய்வு கூடம்,விவசாய ஆய்வு கூடம்,மனைப்பொருளியல் ஆய்வு கூடம் ஆகிய வசதிகளுடனான கட்டிடத் தொகுதி கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ,றிஸாட் பதியுதீன்,வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாரூக்,முத்தலீப் பாபா பாரூக் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
















அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் 200 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா மன்னாரில் ஆரம்பம். Reviewed by NEWMANNAR on October 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.