கிளிநொச்சி மாவட்டத்தில் அழிவடைந்த நெற்செய்கை விவசாயிகளுக்கு காலபோக நெற்செய்கைக்கான விதைநெல்
கிளிநொச்சி மாவட்டத்தில் அழிவடைந்த நெற்செய்கை விவசாயிகளுக்கு தற்போது காலபோக நெற்செய்கைக்கான விதைநெல் வழங்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தில் விதை நெல் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஆயிரத்து 462 ஏக்கர் நிலப்பரப்பிற்காக 2 ஆயிரத்து 924 புசல் விதைநெல்லை யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி, அக்கராயன், உருத்திரபுரம், புளியம்பொக்கணை, முழங்காவில் ஆகிய கமநலசேவை நிலையங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கப்பட்டது.
மண்ணை நம்பி வாழ்கின்ற விவசாயிகள் காலத்திற்கேற்ப மாற்றங்களையும் கவனத்தில் எடுத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைந்தளவு உற்பத்திச் செலவில் அதிகளவு இலாபத்தைத் தரக்கூடிய விவசாய நடவடிக்கைகளுக்கு மாற வேண்டும். குறிப்பாக விவசாயிகள் அழிவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு விவசாய காப்புறுதி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
கடந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனமையால் இவ்வருடம் விவசாயிகள் விதை நெல்லைக் கூடப் பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு வேறு வழிகளில் விவசாயிகளுக்கு விதைநெல்லைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு தற்போது விதை நெல்லை வழங்கி வருகின்றோம் எனப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அழிவடைந்த நெற்செய்கை விவசாயிகளுக்கு காலபோக நெற்செய்கைக்கான விதைநெல்
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment