மன்னார் அரச போக்குவரத்துச் சேவைக்கு புதிய 10 பேரூந்துகள் வைபவ ரீதியாக கையளிப்பு.-Photo
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு வழங்கப்பட்ட புதிய 10 பேரூந்துகள் நேற்று(14) செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.செனவிரத்தின,அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் விஜய தஸநாயக்க ஆகியோர் இணைந்து குறித்த பேரூந்துகளை வைபவ ரீதியாக இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை அதிகாரிகளிடம் கையளித்தனர்.
குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் அரச போக்குவரத்துச் சேவைக்கு புதிய 10 பேரூந்துகள் வைபவ ரீதியாக கையளிப்பு.-Photo
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:

No comments:
Post a Comment