அண்மைய செய்திகள்

recent
-

மன்/நானாட்டான் மகா வித்தியாலய மாணவனின் சாதனை-Photo

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 30வது தேசிய மட்ட தடகளப்போட்டி அண்மையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. மன்னார் மாவட்டம் சார்பாக அதிகளவிலான வீரவீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

இப்போட்டியில் மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன. இதில் 06.10.2014ஆம் திகதி நடைபெற்ற 21 வயது பிரிவுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டி நிகழ்வில் மன்/நானாட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் ஜோர்ச்   அன்று டிலைக்சன் 1.90m  உயரத்தை கடந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். 

 எனவே மன்னார் மாவட்டத்தில் பதக்கங்கள் அடிப்படையில் நானாட்டான் மகா வித்தியாலயம் முதல் இடத்தினை பெறுகின்றது. 2013ம் ஆண்டும் மன்னார் மாவட்டத்திற்கு தேசிய மட்டத்தில் ஓர் இடமே கிடைக்கப்பெற்றது. இவ் வெற்றிக்கு உரித்தான மாணவனும் மேற்குறித்த செல்வன் ஜோர்ச் அன்று டிலைக்சனே ஆவார்.

அதுவும் நானாட்டான் மகா வித்தியாலயத்திற்கே உரித்தானதாகும். இவ்வெற்றிக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்த பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட்  அவர்கட்கும், உடற்கல்வி ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமான ஆசிரியர் திரு.ளு.சிறிதேவகரன் (ஸ்ரான்லி) அவர்கட்கும், இப் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை திருமதி றூபா தேவராசா அவர்கட்கும், பாடசாலை சமூகம் பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்து நிற்கின்றது.









மன்/நானாட்டான் மகா வித்தியாலய மாணவனின் சாதனை-Photo Reviewed by NEWMANNAR on October 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.