யாழ்தேவி கட்டண விபரங்கள் அறிவிப்பு
யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ள வட பகுதி ரயில் மார்க்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் பயணத்திற்காக, 1,500 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் ஜீ.டபிள்யூ.எஸ்.சிசிர குமார கூறுகின்றார்.
முதல் வகுப்பு ஆசனங்களுக்காக 900 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்காக 800 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
முற்பதிவு செய்த மூன்றாம் வகுப்பு பற்றுச்சீட்டு 500 ரூபா எனவும், மூன்றாம் வகுப்பிற்கான சாதாரண கட்டணமாக 320 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் மேலும் குறிப்பிடுகின்றார்.
யாழ்தேவி கட்டண விபரங்கள் அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:


No comments:
Post a Comment