அண்மைய செய்திகள்

recent
-

பெரியகடை ஸ்டார் ஈகிள் விளையாட்டுக்கழகத்தின் T10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி

மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அனுமதியுடன் பெரியகடை ஸ்டார் ஈகிள் விளையாட்டுக்கழகம் நடாத்திய 10 ஓவர்கள் கொண்ட லீக் முறையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த சுற்றுப்போட்டியில் மன்னார் மாவட்ட கிரிக்கட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 09 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியது. 

இதன் இறுதிப்போட்டி 2014-10-12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு.பர்சூக் தலைமையில் நடைபெற்றது. இதில் பெரியகடை ஸ்டார் ஈகிள் அணியும், பட்டித்தோட்டம் சென்.நிக்கொலஸ் அணியினரும் மோதினர். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெரியகடை ஸ்டார் ஈகிள் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர். 

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை குவித்தனர். ஸ்டார் ஈகிள் அணிசார்பாக முருகா 76 (31) ஓட்டங்களையும், பிரியகாந்த் 67 (22) ஓட்டங்களையும் றோய் 30 (07) ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் சென.நிக்கொலஸ் அணிசார்பாக யூட்சன், அன்ரனி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு 187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்.நிக்கொலஸ் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதன் மூலம் ஸ்டார் ஈகிள் அணியினர் 87 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தினை வென்றனர். 

துடுப்பாட்டத்தில் சென்.நிக்கொலஸ் அணிசார்பாக தினேஸ் 37 (23) ஓட்டங்களையும், ஜெகன் 21 (06) ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். பந்து வீச்சில் ஸ்டார் ஈகிள் அணிசார்பாக ஜோர்ச் ஹெட்ரிக் சாதனையுடன் 03 விக்கெட்டுக்களையும், அரவிந்த் 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள். 

இறுதிப்போட்டியில் ஸ்டார் ஈகிள் அணியினரால் 10 ஓவர்களில் பெறப்பட்ட 186 ஓட்டமானது மன்னார் மாவட்டத்தில் அணி ஒன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் எனும் புதிய சாதனையினை பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்டார் ஈகிள் அணியின் முருகா தெரிவுசெய்யப்பட்டார். தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக ஸ்டார் ஈகிள் அணியின் பிரியகாந் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக சென்.ஜோசப் அணியின் அருள் தெரிவுசெய்யப்பட்டார்.
பெரியகடை ஸ்டார் ஈகிள் விளையாட்டுக்கழகத்தின் T10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி Reviewed by NEWMANNAR on October 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.