அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை கிராமத்தை அடையாளப்படுத்தும் வீதியோர பெயர்ப்பலகை மீது கழிவு ஒயில் தாக்குதல்.-Photo

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பேசாலை கிராமத்தை அடையாளப்படுத்தும் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை மீது நேற்று திங்கட்கிழமை இரவு (13) இனம் தெரியாத நபர்களினால் கழிவு ஒயில் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து பேசாலைக்கு வரும் வீதியில் போசலை கிராமத்தின் எல்லையை அடையாளப்படுத்தும் வகையில் சீமேந்தினால் குறித்த பெயர்ப்பலகை தயாரிக்கப்பட்டு வீதியோரத்தில் நாட்டப்பட்டுள்ளது.அதில் பேசாலை என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே குறித்த பெயர்பலகை மீது கழிவு ஒயில் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பேசாலை கிராம முக்கியஸ்தர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.





பேசாலை கிராமத்தை அடையாளப்படுத்தும் வீதியோர பெயர்ப்பலகை மீது கழிவு ஒயில் தாக்குதல்.-Photo Reviewed by NEWMANNAR on October 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.