அண்மைய செய்திகள்

recent
-

ரஜினிக்கு சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது

சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு இந்திய மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ரசிகர்கள் ஏராளம். அவரது ரசிகர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர் என்று அரசியல் தலைவர்களே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் ரசிகர் பட்டாளம் உள்ள ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது.


இந்நிலையில் மத்திய அரசு ரஜினிக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. நிகழ் ஆண்டுக்கான சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவாவில் வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்திய சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவில் தலைமை விருந்தினராக நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார்.

2014ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் திரைப்படமான “தி பிரசிடென்ட்’ விழாவின் தொடக்கத்திலும், சீனத் திரைப்படமான “தி கிராண்ட் மாஸ்டர்’ விழாவின் இறுதியிலும் திரையிடப்படும். 75 நாடுகளின் 179 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.
ரஜினிக்கு சிறந்த திரைப்பட கலைஞருக்கான நூற்றாண்டு விருது Reviewed by NEWMANNAR on November 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.