அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வர ஆலய உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டும் இது வரை நடவடிக்கை எடுக்காத நிர்வாகம்

மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள உண்டியல் இது வரை 4 தடவைகளுக்கு மேல் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இது தொடர்பாக திருக்கேதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை எனவும் இனியாவது இது தொடர்பில் உரிய நடவடிக்கையினை எடுப்பார்களா என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,,,,

பல தடவைகள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டும் நிர்வாகத்தினர் எதுவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாத  நிலையில் கடந்த நவராத்திரி விழாவின்போது அதாவது 25.09.2014 அன்று பாலாவி கரையில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டது . பின்னர் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் அங்கத்தவர்களாக உள்ள ஒருவரால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது இருப்பினும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.கோயில் நிர்வாகத்தினரால் எதுவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் பின்னர் ஆலய நிர்வாக அங்கத்தினர் ஒருவரால் இரு மாதங்களாக அவரது சொந்த செலவில் காவலாளி ஒருவரை வேலைக்கு அமர்த்தி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆலயம் ஒன்றின் சொத்துக்களையும்,உடமைகளையும் பாதுகாப்பது ஆலய நிர்வாகத்தின் தலையாய பொறுப்பாகும் எனவே இனியாவது ஆலய உண்டியலை பாதுகாக்க உரிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் .விசனம் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர திருக்கேதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரால் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் மன்னார் இணையத்திற்கு தெரிய வந்துள்ளது.

இலங்கையில் உள்ள சிவாலயங்களில் பாடல் பெற்றஇரு தலங்களில்  புகழ்வாய்ந்த சிவாலயமாக திருக்கேதீஸ்வரம் திகழ்கின்றது .இவ்வாறான  பிரசித்தி மிக்க சிவாலய நிர்வாகத்தினர் தொடர்பில் முறைப்பாடுகள் எழுந்தவண்ணமே உள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் இணையம் திரட்டி வருகிறது.


மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வர ஆலய உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டும் இது வரை நடவடிக்கை எடுக்காத நிர்வாகம் Reviewed by NEWMANNAR on November 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.