‘ஓய்வூதியம் பெறுவோருக்கு இன்று ரூ2500 இடைக்கால கொடுப்பனவு’
வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்க ப்பட்ட 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு இன்று ஓய்வூதிய கொடுப்பனவுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுனில் ஹெட்டியாராச்சி சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதி கடந்த மாதம் 24ம் திகதி சமர்ப்பித்த போது ஓய்வூதியர்களின் சம்பளப் பிரச்சினைகளில் நிலவும் முரண்பாடுகளை சீர்செய்யும் வரை இடைக்கால கொடுப்பனவை வழங்க முன்மொழிவொன்றை செய்திருந்தார்.
அதற்கமையவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறும் ஒருவர் திருமணம் முடித்தமை காரணமாக ஐம்பது வீத ஓய்வூதிய கொடுப்பனவை பெறுவாராயின் மேற்படி இடைக்காலக் கொடுப்பனவில் ஐம்பது வீதமான ரூ. 1250 வை மட்டும் பெற உரித்துடையவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘ஓய்வூதியம் பெறுவோருக்கு இன்று ரூ2500 இடைக்கால கொடுப்பனவு’
Reviewed by NEWMANNAR
on
November 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 10, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment