அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-தாழ்வுபாடு தனியார் போக்குவரத்துச் சேவையின் சீர்கேடுகள் குறித்து கிராம மக்கள் அரசாங்க அதிபருக்கு கடிதம்

மன்னாரில் இருந்து தாழ்வுபாடு கிராமத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார் பஸ் போக்குவரத்துச் சேவையில் உள்ள சீர்கேடுகள் குறித்தும் பொது மக்கள் மீதான துஸ்பிரையோகங்கள் குறித்தும் குறித்த கிராம மக்களும் பாடசாலை மாணவர்களும் எழுத்து மூலம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,,,,,,,,,,,,,,

குறித்த விடையங்கள் தொடர்பாக தாழ்வுபாட்டு கிராம மக்களும் அக்கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களும் தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகையில் மன்னார் தனியார் போக்குவரத்துச் சபையினால் தாழ்வுபாடு-மன்னார் மன்னார்-தாழ்வுபாடு எனும் போக்குவரத்துச் சேவையினை தினமும் நடத்தி வருகின்றனர்.இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னனார் சாலையில் இருந்தும் குறித்த சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மேற்படி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் குறித்த பஸ் சேவையினை பயண்படுத்தும் பொது மக்களையும் மாணவர்களையும் மரியாதை குறைவாக நடத்துகின்றனர்.

மேலும் ஆண் பெண் வயது வித்தியாசமின்றி தகாத வார்த்தைப்பிரையோகங்களினால் பேசுகின்றனர்.அத்துடன் பயணிகளின் நலன்களில் குறித்த சேவையில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகளும் நடத்துனர்களும் அக்கறை செலுத்துவதில்லை.

மன்னார்-தாழ்வுபாட்டிற்கிடையில் சுமார் 6 கி.மீ தூரத்தை கடப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது.மேலும் வழங்கப்படும் பணத்திற்கு மிகுதி பணம் செலுத்தப்படுவதில்லை.மேலும் பயணக் கட்டணத்தை விட அதிக பணத்தினை பயணிகளிடம் இருந்து அறவிடுகின்றனர்.

இவ்விடையம் தொடர்பில் சாரதி நடத்துனர்களிடம் கேட்டால் அச்சுறுத்துகின்றனர்.மேலும் மன்னார்-தாழ்வுபாடு சேவையில் ஈடுபடும் இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் சாரதி மற்றும் நடத்துனர்களுடன் அடிக்கடி முரண்படுவதுடன் அவர்களை அச்சுரூத்தியும் வருகின்றனர்.


இந்த நிலையில் தாழ்வுபாட்டில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு காலை 6 மணிக்கு நோயளர்களை பார்க்க செல்லுவதற்கு குறித்த பஸ் சேவை இல்லாமையினால் அக்கிராம மக்களாகிய நாங்கள் தினம் தினம் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்விடையங்களில் தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் அக்கிராம மாணவர்களுக்கும் சிறந்த போக்குவரத்துச் சேவையினை ஏற்படுத்தி தருமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னார்-தாழ்வுபாடு தனியார் போக்குவரத்துச் சேவையின் சீர்கேடுகள் குறித்து கிராம மக்கள் அரசாங்க அதிபருக்கு கடிதம் Reviewed by NEWMANNAR on November 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.