தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
தொடரும் பலத்த மழையினால், தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
இதனால் புத்தளம் – மன்னார் வீதியின், எழுவாங்குளம் பகுதி வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.
இதேவேளை, இரத்தினபுரி, கொலன்ன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எக்ஸ்பேர்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக, 63 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.
இதேவேளை, அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை சஸ்பி – மின்னா பகுதியிலும் மண்சரிவு அபாயம் காரணமாக, 09 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்தவர்கள் தோட்ட மண்டபமொன்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு
Reviewed by NEWMANNAR
on
November 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 06, 2014
Rating:


No comments:
Post a Comment