அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் கிராமத்தில் வெள்ளம்-62 குடும்பங்கள் இடம் பெயர்வு-Photos


மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளமையினாலும்,கடல் நீர் கிராமங்களுக்குள் உட் சென்றுள்ளமையினாலும் அக்கிராமத்தைச் சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த 234 பேர் இடம் பெயர்ந்து சௌத்பார் பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று புதன் கிழமை இரவு மற்றும் இன்று வியாழக்கிழமை காலை வரை பெய்த கடும் மழையினைத் தொடர்ந்தே குறித்த மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக சௌத்பார் கிராம அலுவலகர் தெரிவித்தார்.

குறித்த கிராமத்தில் 105 குடும்பங்களைச் சேர்ந்த 515 பேர் வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் 62 குடும்பங்களே  பாதிக்கப்பட்டு சௌத்பார் பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மக்களை மன்னார் பிரதேசச் செயலாளர் கே.வசந்த குமார்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க மன்னார் பிரதேசச் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் சௌத்பார் கிராமத்தில் வெள்ளம்-62 குடும்பங்கள் இடம் பெயர்வு-Photos Reviewed by NEWMANNAR on November 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.