அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம்

அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிகெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூக்ஸ் அகால மரணமடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டி ஒன்றின் போது பந்து தலையில் பட்டு படுகாயமடைந்த நிலையில் பிலிப் ஹியூஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தொடர்ந்தும் நினைவிழந்த நிலையில் இருந்த பிலிப் ஹியூக்ஸ் இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

25 வயதான பிலிப் ஹியூக்ஸ் 26 டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தனது 20ஆவது வயதில் தென் ஆபிரிக்காவிற்கு எதிரான கன்னிப் போட்டியில் பங்கேற்ற பிலிப் ஹியூஸ் தனது இரண்டாவது போட்டியிலேயே இரட்டைச்சதம் அடித்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் Reviewed by NEWMANNAR on November 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.