மன்னாரில் ஒன்றரை வயது குழந்தைக்கு நஞ்சைப் பருக்கி விட்டு தானும் குடித்த தந்தை-குழந்தை மரணம்-Photos ,Video
மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தச்சனா மருதமடு கிராமத்தில் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
விஷம் அருந்திய குழந்தை மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோர் பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.எனினும் குழந்தை உயிரிழந்து விட்டது.
மேலதிக சிகிச்சைக்காக குழந்தையின் தந்தையான சுஜேந்திரன் (வயது-28) என்பவர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றரை வயதுடைய சுஜேந்திரன் தரனி என தெரியவந்துள்ளது.குறித்த சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சடலத்தை பார்வையிட்ட மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.
குறித்த நபரின் மனைவி இரு மாதங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட மனக்கஸ்டத்தில் தந்தை தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இச் சம்பவம் குறித்து மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் ஒன்றரை வயது குழந்தைக்கு நஞ்சைப் பருக்கி விட்டு தானும் குடித்த தந்தை-குழந்தை மரணம்-Photos ,Video
Reviewed by NEWMANNAR
on
November 26, 2014
Rating:

No comments:
Post a Comment