அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹுனைஸ் பாறுக் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக வன்னி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவிற்கு ஹுனைஸ் பாறுக் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் , கிழக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட நேற்று தீர்மானித்திருந்தனர்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான அமீர் அலி, பிரதி தவிசாளரான எம்.சுபைர் மற்றும் ஷிப்லி பாறுக் ஆகிய மூன்று உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். Reviewed by NEWMANNAR on November 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.